Wednesday, November 11, 2009

மழை

ஜன்னலோர இருக்கைக்கு
சண்டையிட்ட இருவரை
சமாதானம் செய்துவைத்தது!

மழைத்துளி

கல்லூரிப் பெண்ணொருத்தியை
காற்றின் உதவியோடு குடையை விலக்கித்
தொட்டுப் பார்த்தது!

காளான்

நேற்று நனைந்த சிறுவனுக்கென
குடை விரித்திருக்கிறது
இயற்கை

ஈரம்

காடு மலைகள் கூட
குளிர்ந்து கிடக்கின்றன
கண்ணாடிக்கோ வியர்த்திருக்கிறது!

வலி

மழை அடித்ததால்
வீங்கிப் போயிருக்கிறது
வீதியில் கிடக்கும் மரப்பொம்மைக்கு

பள்ளி வேலை நாள்

எங்கள் வீட்டைக் கடக்கிற
மழை நீரில் கப்பலுக்குப் பதிலாக
காகிதம் மிதக்கிறது

No comments:

Post a Comment