Tuesday, December 22, 2009

விண்டோஸ் வேகம் பெற இனியவை 40

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது. தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது. ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.

1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக்(SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம. இந்த புரோகிராம் பெறhttp://www.onlinetechtips.com/freesoftwaredownloads/freedefragmenter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.

2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும். இந்த புரோகிராமினைப் பெறhttp://www.onlinetechtips.com/computertips/treesizefreeutilitytofindviewandfreeupharddiskspace/என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். இதனைப் பெறhttp://www.onlinetechtips.com/computertips/speedupwindowsxpboot/ என்ற முகவரிக்குச் செல்லவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.

4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.

5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.

6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.

7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.

8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.

9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.

10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.

11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.

12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனைhttp://www.techrecipes.com/rx/1353/xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.

13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைக�ளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.

14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.

15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.

18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.

19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.

20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.


21. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும்TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.


22. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே!


23. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance"தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

24. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.

25. விண்டோஸ் இயக்கத்திற்கான டிரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.

26. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Removeஎன்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.

27.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.

28. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.

29. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.

30. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.

31. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

32.நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக இருந்தால் உங்கள் ப்ராசசருக்கு ஒரு ஓவர்கிளாக் போடலாம். இதனை எப்படி போடுவது என்பதை http://www.wikihow.com/OverclockaPC என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

33. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

34. உங்கள் கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ், சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி டிரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (BIOS)செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.

35. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.

36.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.

37. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.

38. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.

39. மிக மிக ஸ்லோவாக இயங்குகிறதா? தயங்காமல் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திடவும். பைல்களைக் கவனமாக பேக் அப் செய்துவிட்டு, விண்டோஸ் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரைவர் பைல்களைத் தயாராக வைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ளலாம்.

40. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா? இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.

Sunday, December 20, 2009

குறள் எண் : 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

Friday, December 18, 2009

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ( குறள் எண் : 2 )

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

Wednesday, December 9, 2009

குறள் எண் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது
சென்னை : உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டினை சிறப்பாகவும், சீரிய முறையிலும் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு, ஆணையிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே மாநாட்டு தலைமைக் குழு, ஆய்வரங்க அமைப்பு குழு, சிறப்பு மலர் குழு என்று பல்வேறு குழுக்களை அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.


இந்நிலையில், மாநாட்டினை வெற்றிகரமாக நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனையை பெறும் வகையில் முதல்வர், சட்டசபை கட்சித் தலைவர்களிடம் ஒத்துழைப்பு தருமாறு கோரி, கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படையில் பதில் தெரிவித்துள்ள சட்டசபை கட்சித் தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. குழுவின் விவரம்: ஆலோசனை குழு தலைவர் முதல்வர் கருணாநிதி, உறுப்பினர்கள்: நிதியமைச்சர் அன்பழகன், சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக காங்., தலைவர் தங்கபாலு, திராவிடர் கழக வீரமணி, எம்.ஜி.ஆர்., கழகம் இராம வீரப்பன், பாட்டாளி மக்கள் கட்சி கோ.க.மணி, மா.கம்யூ., என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சிவபுண்ணியம், பாரதிய ஜனதா கட்சி இல.கணேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஸ்ரீதர் வாண்டையார், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி, கொங்கு முன்னேற்றக் கழகம் பெஸ்ட் ராமசாமி, தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் அமைப்பாளர் அலாவுதீன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். தமிழ் செம்மொழியாக அறிவித்த பிறகு நடைபெறுகின்ற உலக அளவிலான முதல் மாநாடு என்பதால், இதை மிகச் சிறப்பாக நடத்த இந்த ஆலோசனை குழு அமைக்கப் பட்டுள்ளது.