Wednesday, March 10, 2010

மோசமான ஆட்டம் ; வீரர்கள் 7 பேருக்கு கடும் தண்டனை ; பாக்., வாரியம் போட்ட குண்டு

இஸ்லாமாபாத்: ஆஸி., தொடரில் மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 7 பேருக்கு கடும் தண்டனை அறிவித்துள்ளது. குறிப்பாக முன்னாள் கேப்டன் முகம்மது யூசூப், யூனிஸ்கான் ஆகிய இருவரும் ஆயுள் காலம் ழுவதும் விளையாட முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கடும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பாக்., ஆட்டக்காரர்கள் போக்கே காரணம் என்றும் முறையாக ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.


அபராதமும் உண்டு : இதனையடுத்து இது குறித்து விசாரணைக்கமிட்டி அமைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தண்டனை அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்தது. இதனையடுத்து பாக்., கிரிக்கெட் வாரியம் தண்டனையை அறிவித்துள்ளது. இதன்படி முன்னாள் கேப்டன்கள் முகம்மது யூசூப், யூனிஸ்கான் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் ஆடத்தடை விதிக்கப்பட்டது. சோயப் மாலிக் ( ஒத்துழையாம‌ை ) . ராணா ( ஒத்துழையாம‌ை ) ஆகியோர் ஒரு ஆண்டு ஆடத்தடையும், ஷாகீத் அப்ரிதிக்கு ( பந்தை சேதப்படுத்துதல் ) 30 லட்சம் அபராதமும் , அக்மல் சகோதரர்களுக்கு ரூ 5லட்சம் அபராதமும், விதிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் தோல்வி எவ்வளவு ? : இந்த அதிரடி உத்தரவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த இந்த ஆஸி ., பயணத்தில் 5 ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட் தொடர் , ஒரு டுவென்டி 20 போட்டிகள் நடந்தது. இத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த விவகாரத்திற்குத்தான் இன்று அறிவிக்கப்பட்டுள்ள தண்டனை. பாக்., கிரிக்கெட் எதிர்காலம் என்னவாகும்?

No comments:

Post a Comment